தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய மாநில அரசு வெளிச்சந்தையில் கடன் வாங்க அனுமதி அளிக்குமாறு மத்திய அரசைக் கோரியிருந்தது. மேலும் 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள், தில்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இதேபோல் அனுமதி கேட்டிருக்கின்றன. தமிழகத்துடன் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் 78 ஆயிரத்து 542 கோடி ரூபாய் கடனாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 1.10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த மாநிலங்கள் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்