டெல்லி: சுரேஷ் அங்காடி ஒரு அர்ப்பணிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார் என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே துணை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 65. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார்.
இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் அங்காடியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சுரேஷ் அங்கடி ஒரு அர்ப்பணிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு மறைவு வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், எப்போதும் சிரித்த அங்காடிஜி எனக்கு நினைவிருக்கிறது. இந்த சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.