தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, குமரி, தென்காசி, உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைத்தூரல் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கல்லூரில் ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Follow on Facebook (https://www.facebook.com/industrialpunch) and Twitter (https://twitter.com/IndustrialPunch) for updates on social media…