கோவிட்-19-க்கான தடுப்பு மருந்தினை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்பதிவு ஏதுமின்றி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ள மத்திய அரசு, அது தொடர்பான புள்ளி விவரங்களையும் எடுத்துரைத்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பு மருந்து செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் ஊரகப் பகுதிகளில் செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது,.
கோவின் இணைதளத்தில் இடம்பெற்றுள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 49 ஆயிரத்திற்கும் கூடுதலானவை ஊரகப் பகுதிகளில் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் தேசிய சராசரியைவிட கூடுதலாக தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunch) पर Follow करें …