உத்தரபிரதேச மாநிலம், மீரட்-டில் அமைக்கப்படவுள்ள மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று அடிக்கல் நாட்டினார்.
மீரட் அருகேயுள்ள சர்தானா பகுதியில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பல்கலைக் கழகம் அமைக்கப்படவுள்ளது.
நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, உருவாக்கப்படும் இந்த பல்கலைக் கழகத்தில் செயற்கை இழை HOCKEY மைதானம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மைதானங்கள், செயற்கை இழை ஓடுதளம், நீச்சல் குளம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.