நாட்டில் ஒரே குடும்ப அட்டை திட்டம் ஒன்பது மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதையடுத்து இந்த மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து 23 ஆயிரத்து 523 கோடி ரூபாய் கூடுதல் கடன்பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.