கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் மேலும் பல செயல்பாடுகளைத் திறக்க புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் (எம் ஹெச் ஏ) இன்று வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 1 அக்டோபர் 2020 முதல் நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறைகளின்படி செயல்பாடுகளைத் திறப்பதற்கான வழி முறைகள் மேலும் விரிவுபடுத்தப் பட்டுள்ளன. மாநிலங்களிடமிருந்தும், யூனியன் பிரதேசங்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தொடர்புடைய மத்திய அமைச்சகங்களுடனும், துறைகளுடனும் நடத்தப்பட்ட விரிவான கலந்தாலோசனைகளின் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் 15 அக்டோபர் 2020 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள செயல்பாடுகள்:

திரைப்படங்கள்/ திரைப்பட அரங்குகள்/ பல்லங்காடி அரங்குகள் — மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் இருக்கைகளுடன் திறக்கலாம்.  இதற்கான இயக்க தர வழிமுறைகள் (எஸ் ஓ பி) மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்படும்.

வர்த்தகர்களுக்கான வர்த்தகம் (பி 2 பி) கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்கான இயக்க தர வழிமுறைகள் (எஸ் ஓ பி) மத்திய வர்த்தக துறையால் வெளியிடப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும். இதற்கான இயக்க தர வழிமுறைகள் (எஸ் ஓ பி)  மத்திய இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சகத்தால் (எம் ஓ வை ஏ எஸ்) வெளியிடப்படும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அது போன்ற இடங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும்.  இதற்கான இயக்க தர வழிமுறைகள் (எஸ் ஓ பி) மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தால் (எம் ஓ ஹெச் எஃப் டபிள்யூ) வெளியிடப்படும்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் திறப்பு

2020 அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை படிப்படியாக மீண்டும் திறப்பது தொடர்பாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் முடிவு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி / கல்வி நிலைய நிர்வாகத்தின் ஆலோசனையுடன், நிலைமை குறித்து அவர்களுடைய மதிப்பீடு மற்றும் பின்வரும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்:

  • ஆன்லைன் / தொலைநிலைக் கல்வி முறையே கற்பித்தலுக்கான, விரும்பத்தகுந்த நடைமுறைகளாக இருக்கும், அவற்றையே ஊக்குவிக்கலாம்.
  • பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் நிலையில், நேரடியாக வகுப்புகளுக்கு வருவதைவிட ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதையே சில மாணவர்கள் விரும்பக் கூடும். அவர்களுக்கு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
  • பெற்றோர்களின் எழுத்துபூர்வ ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகள் / கல்வி நிலைய வகுப்புகளில் பங்கேற்கலாம்.
  • வருகைப் பதிவு கட்டாயமாக்கப் படக்கூடாது. பெற்றோரின் ஒப்புதலைப் பொருத்தே அது அமைய வேண்டும்.
  • மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL), வெளியிடும் எஸ்.ஓ.பி. அடிப்படையில், பள்ளிகள் / கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கான எஸ்.ஓ.பி.க்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இவற்றை உருவாக்க வேண்டும்.
  • திறப்பதற்கு அனுமதிக்கப்படும் பள்ளிகளில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கல்வித் துறைகள் வெளியிடும் எஸ்.ஓ.பி.க்கள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
  • கல்லூரிகள் / உயர் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான காலம் குறித்து, சூழ்நிலைகள் குறித்த ஆய்வின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை முடிவு எடுக்கும்.  ஆன்லைன் / தொலைநிலைக் கல்வி முறையே கற்பித்தலுக்கான, விரும்பத்தகுந்த நடைமுறைகளாக இருக்கும், அவற்றையே ஊக்குவிக்கலாம்.
  • இருந்தபோதிலும், ஆய்வகம் / பரிசோதனைப் பணிகளுக்கான வசதிகள் தேவைப்படும் நிலையில்  உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஎச்.டி.) மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு, பின்வரும் வகையில் உயர் கல்வி நிலையங்கள் 2020 அக்டோபர் 15க்குப் பிறகு அனுமதி அளிக்கலாம்:

 

  1. மத்திய நிதி உதவி பெறும் கல்வி நிலையங்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பயிலும்  ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு, ஆய்வகம் / பரிசோதனைப் பணிகளுக்கான வசதிகள்  நியாயமாகத் தேவைப்படுகின்றனவா என்பதில், கல்வி நிலையத்தின் தலைவர் திருப்தி அடைய வேண்டும்.
  2. மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் போன்ற மற்ற அனைத்து உயர் கல்வி நிலையங்களைப் பொருத்தவரை, அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப, ஆய்வகம் / பரிசோதனைப் பணிகளுக்கான வசதிகள் தேவைப்படும் நிலையில்  உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஎச்.டி.) மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு மட்டும் திறக்கலாம்.

மக்கள் கூடுவதற்கு கட்டுபாடு

  • சமூக / கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு / கலாச்சார / மத / அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்கள் ஏற்கனவே 100 நபர்களின் உச்சவரம்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவைகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டுமே. 2020 அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே, இது போன்ற கூட்டங்களுக்கு 100 நபர்களுக்கு மேல் அனுமதிக்க மாநில / யூனியன் பிரதேசஅரசாங்கங்களுக்கு இப்போது தளர்வு வழங்கப்பட்டுள்ளது, இது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது:
  • மூடிய இடங்களில், அதாவது கூட்டம் நடைபெறும் அரங்குகளின் கொள்ளவில், அதிகபட்சம் 50% அனுமதிக்கப்படும், உச்சவரம்பு 200 நபர்கள்.
  • முககவசங்களை அணிவது, சமூக தூரத்தை பராமரித்தல், உடல் வெப்பநிலை ஸ்கேனிங்கிற்கான ஏற்பாடு மற்றும் கை கழுவல் அல்லது கிருமி நாசினி பயன்பாடு கட்டாயமாக இருக்கும்.

அத்தகைய கூட்டங்கள் மூலம் COVID-19 ஐ பரப்ப படவில்லை என்பதை உறுதிப்படுத்தமாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் அத்தகைய கூட்டத்தை ஒழுங்குபடுத்த விரிவான நிலையான இயக்க நடைமுறைகளை வெளியிடுவதுடன்அதை கண்டிப்பாக அமல்படுத்தும்.

 

  • பின்வருவனவற்றைத் தவிர அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அனுமதிக்கப்படும்:

I. பயணிகளின் சர்வதேச விமான பயணம், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தவிர,

 

  • ஊரடங்கு அக்டோபர் 31, 2020 வரை கண்டிப்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • நோய் தொற்று சங்கிலியை திறம்பட உடைக்கும் நோக்கத்துடன், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு மைக்ரோ மட்டத்தில் மாவட்ட அதிகாரிகளால் கட்டுப்பாட்டு மண்டலங்கள் வரையறுக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்பதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள், நோய் தொற்று உள்ள சுற்று பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு பராமரிக்கப்படும் என்பதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • இந்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வலைத்தளங்களிலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களாலும் அறிவிக்கப்படும், மேலும் தகவல்கள் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூலமும் பகிரப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே எந்த முடக்கத்தையும் மாநிலங்கள் விதிக்கக்கூடாது

• மாநில/யூனியன் பிரதேச அரசுகள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே , மத்திய அரசுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தாமல் உள்ளூர் முடக்கங்களை ( மாநிலம்/மாவட்டம்/உட்கோட்டம்/நகரம்/கிராம அளவில்) விதிக்கக்கூடாது

 மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே எந்த தடையும் இல்லை  

• மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு உள்ளும் நபர்கள், பொருட்கள் போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. அத்தகைய போக்குவரத்துக்கு தனி அனுமதி/அனுமதி/இ-பாஸ் தேவையில்லை.

கொவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்தல்கள்

      • கொவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்தல்கள் சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடைகளில்,  வாடிக்கையாளர்களிடம் போதுமான சமூக இடைவெளி பராமரிக்கப்படுவது அவசியமாகும். தேசிய அறிவுறுத்தல்கள் சிறப்பாக அமல்படுத்தப்படுகின்றனவா என மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும்.      

பாதிப்பு வாய்ப்புள்ள நபர்களுக்கு பாதுகாப்பு

• பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள நபர்கள், அதாவது 65 வயதுக்கு மேற்பட்டோர், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர்  அத்தியாவசியத் தேவைகளுக்காகவோ, மருத்துவ நோக்கங்களுக்காவோ  தவிர, வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆரோக்கிய சேது பயன்பாடு

     

• ஆரோக்கிய சேது  கைபேசி செயலி பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.

  • Website Designing