பங்ளாதேஷூடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திரமோடி கூறியுள்ளார்.
பங்ளாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுடனான உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார்.
கோவிட்-19 தடுப்புப் பணிகளை பங்ளாதேஷ் அரசு சிறப்பாக மேற்கொண்டதாகக் கூறிய பிரதமர், அதற்காக அந்நாட்டுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
கோவிட்-19 காரணமாக நடப்பு ஆண்டு முழுவதும் சவால் நிறைந்ததாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையிலும்கூட, இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பு நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 தடுப்புப் பணிகள் மற்றும் தடுப்பு மருந்து தொடர்பாக நல்லுறவு நீடித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் பங்க பந்து, ஷேக் முஜ்பர் ரஹ்மானின் கொள்கைகள் இளைஞர்களுக்கு இன்றளவும் உந்து சக்தியாக உள்ளது என்று திரு நரேந்திரமோடி தெரிவித்தார்.
பங்ளாதேஷ் விடுதலைக்காக முழு மனதோடு ஆதரவு அளித்த இந்தியாவுக்கு தங்கள் நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
பங்க பந்து – மகாத்மா காந்தியடிகளின் டிஜிட்டல் கண்காட்சியையும் இரு தலைவர்களும் திறந்து வைத்தனர்.
இந்தியாவின் ஹல்திபாரி – பங்ளாதேஷ்ஷில் உள்ள சிலாஹெட்டி இடையேயான புதிய ரயில் பாதையையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.
ஷேக் முஜிபர் ரஹ்மானின் நினைவு அஞ்சல் தலையையும் திரு நரேந்திரமோடியும், திருமதி ஷேக் ஹசினாவும் வெளியிட்டனர்.